உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்களில் வெட்டுக்கிளிகளால் விவசாய நிலங்கள் பெரும் அழிவை சந்தித்து வருகின்றன.
கடந்த 3 நாள்களாக அந்த மாநிலங்களில் உள்ள விவசாய நிலங்களிலும், அதையொட்டிய குடியிருப்பு பகுதிகளில் இருக்கும் மரம், செடி கொடிகளிலும் வெட்டுக்கிளிகள் பரவியுள்ளன. கண்ணில் தென்பட்ட இலை, தளைகளை வெட்டுக்கிளிகள் தின்று வருவதால், செழித்து வளர்ந்த மரம், செடி கொடிகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன.
வெட்டுக்கிளிகள் தின்ற செடிகளில் இருக்கும் எஞ்சிய இலைகளை கால்நடைகள் தின்பதால் அவற்றுக்கும் நோய் தொற்று ஏற்பட்டு வருகிறது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் 3 மாநிலங்களிலுள்ள விவசாயிகளும் திணறி வருகின்றனர். அந்த வெட்டுக்கிளிகளை அழிக்க பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்கும் பணி நடைபெறுகிறது.