ஆந்திர மாநிலம், விசாகபட்டினத்திலுள்ள கிராமம் ஒன்றில் பிடிபட்ட 15 அடிநீள ராஜநாகம் (cobra) வனபகுதியில் விடப்பட்டது.
தம்மடாபள்ளி (Tammadapalli) கிராமத்தில் விவசாய நிலத்தில் சத்தம் வருவதை கண்டு, அங்கு சென்று விவசாயிகள் பார்த்தபோது அங்கு மிகப்பெரிய பாம்பிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அருகில் சென்று பார்த்தபோது அது கொடிய விஷம் கொண்ட ராஜநாகம் என்பதை புரிந்து கொண்டு, வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விரைந்து வந்த வனத்துறையினரும், உள்ளூர் பாம்புபிடி வீரர் ஒருவரும் அதை சாதுர்யமாக பிடித்து, செருகுபள்ளி (cherukupalli) வன பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.