இந்த ஆண்டுக்கான மீன்பிடித் தடைக்காலத்தை 61 நாட்களில் இருந்து 47 நாட்களாக குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கால் மீனவர்கள் ஏற்கனவே மீன் பிடிக்கச் செல்லாத நிலையில் மீன்பிடித் தடைக்காலத்தால் மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதாகவும், அதனைக் குறைக்கவும் மத்திய மீன்வள அமைச்சகத்திடம் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட அரசுகளும் தேசிய மீனவர் பேரவையும் வலியுறுத்தின.
இந்நிலையில் கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடை காலத்தை ஏப்ரல் 15 முதல் மே 31 வரையான 47 நாட்களாகவும், மேற்கு கடற்கரை பகுதியில் ஜூன் 15 முதல் ஜூலை 31 வரையான 47 நாட்களாகவும் குறைத்து மத்திய மீன்வள அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.