டெல்லியில் இருந்து பெங்களூருக்கு விமானம் மூலமாக வந்த மத்திய அமைச்சர் சதானந்த கவுடா தனிமைப்படுத்துதல் ஏதுமில்லாமல் நேராக தமது காருக்குச் சென்று விட்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விமானப் பயணிகளுக்கு ஏழு நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதல் என அறிவித்த கர்நாடக அரசு பயணிகளை பரிசோதிக்க விமான நிலையத்தில் மணிக்கணக்கில் காத்திருக்க செய்த நிலையில் மத்திய அமைச்சர்களுக்கு இந்த சட்டம் பொருந்தாதா என்று ஆங்கில செய்தி ஊடகங்கள் விவாதம் எழுப்பின. இதையடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள கர்நாடக அரசு மத்திய அமைச்சர்களுக்கு விதிமுறைகள் கிடையாது என்று தெரிவித்துள்ளது.
மத்திய மாநில அமைச்சர்கள் அதிகாரிகள் அரசுப் பணிக்காக மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் போது அவர்களுக்கு தனிமைப்படுத்தும் விதிகள் கிடையாது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் 48 மணி நேரத்திற்குள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு நெகட்டிவ் என முடிவு தெரிந்த பயணிக்கு தனிமைப்படுத்துதல் கிடையாது என்றும் கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
class="twitter-tweet">#Sadananda Gowda#kempegowda international airport https://t.co/ulzrGS0e8q
— N.DHAYALAN (@N_DHAYALAN) May 25, 2020