கொரோனா சோதனைக்கு மேல் மற்றொரு சோதனையாக அசாம் மாநிலத்தில் கனமழை மற்றும் வெள்ளத்தால் 5 மாவட்டங்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அசாம் மாநிலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 122 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் அங்கு பாதிக்கபட்டோர் எண்ணிக்கை 514-ஆக உயர்ந்துளது. இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 5 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களை சுகாதாரப் பாதுகாப்பு விதிகளை பின்பற்றி பாதுகாப்பான முகாம்களுக்கு மாற்றி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளத்தால் 5 மாவட்டங்களிலும் ஆயிரக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்த நிலையில், அவற்றில் சில விலங்குகள் ஏற்கனவே 17 ஆயிரம் விலங்குகள் பலியாகக் காரணமாக இருந்த ஆப்ரிக்க பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்திருப்பது அதிகாரிகளை கவலையடையச் செய்துள்ளது.
class="twitter-tweet">The state witnessed its first wave of floods this year affecting over 30,000 people in 5 districts of #Assam. #AssamFloods @sdma_assam @sarbanandsonwal
https://t.co/yyWjBIzlXA