சிறப்பு ரயில்களில் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
தனி நபர் இடைவெளி, முகக் கவசம், கிருமி நாசின் பயன்பாடு உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதில் மத்திய உள்துறை மற்றும் சுகாதார அமைச்சகத்தின் அறிவுறுத்தல்கள் முறையாக கடைபிடிக்கப்படுவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விதிகளைக் கடைபிடிக்கத் தவறும் பயணிகளின் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்படுவதாகவும் கூறியுள்ளனர். நேற்று முன் தினம் வரை 3050 சிறப்பு ரயில்களில் சுகார் 40 லட்சம் பேர் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 80 சதவீதம் பேர் உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.