கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த மருத்துவர்கள், செவிலியர்களை அனுப்பி உதவுமாறு கேரள அரசுக்கு மகாராஷ்டிர அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
கொரோனாவைக் கட்டுப்படுத்தும் வழிகள் குறித்துக் கேரள நலவாழ்வுத்துறை அமைச்சர் சைலஜாவுடன், மகாராஷ்டிர அமைச்சர் ராஜேஷ் தோபே தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டறிந்தார்.
இதையடுத்துக் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி கேரள அரசுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் மகாராஷ்டிரத்தில் கொரோனாவைக் கட்டுப்படுத்த மருத்துவர்கள், செவிலியர்கள் 50 பேர் கொண்ட குழுவை அனுப்பி உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
எம்பிபிஎஸ் மருத்துவர்களுக்கு மாதம் எண்பதாயிரம் ரூபாயும், எம்டி, எம்எஸ் முடித்த மருத்துவர்களுக்கு 2 லட்ச ரூபாயும், செவிலியர்களுக்கு 30ஆயிரம் ரூபாயும் ஊதியம் வழங்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.