இந்திய - சீன எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், சீனா புதிதாகத் தயாரித்துள்ள ஆளில்லா ஹெலிகாப்டரை இந்தப் பகுதியில் பணியில் ஈடுபடுத்த உள்ளதாகச் செய்தி வெளியாகியுள்ளது.
சீன அரசின் விமானத் தயாரிப்பு நிறுவனம் ஏஆர்500சி என்கிற ஆளில்லாத சிறிய வகை ஹெலிகாப்டரைத் தயாரித்துள்ளது.
உளவுக் கண்காணிப்பு, மின்னணுக் கருவிகளைச் செயலிழக்கச் செய்வது, குண்டு வீசித் தாக்குதல் நடத்துவது ஆகிய திறன்களைப் பெற்றுள்ள இந்த ஹெலிகாப்டரைச் சீனா கடந்த வாரத்தில்தான் சோதித்துப் பார்த்துள்ளது.
திபெத் பீடபூமிப் பகுதியில் இந்திய - சீன எல்லையில் இரு நாடுகளும் படையினரைக் குவித்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்தப் பகுதியில் புதிய ஆளில்லா ஹெலிகாப்டரைச் சீனா பணியில் ஈடுபடுத்த உள்ளதாக அந்நாட்டின் நாளேட்டில் செய்தி வெளியாகியுள்ளது.