கராச்சி விமான விபத்துக்கு கட்டுப்பாட்டு மையத்தின் அறிவுறுத்தலை விமானி பின்பற்றாததே காரணம் என தகவல் வெளியாகியுள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை பாகிஸ்தானின் லாகூரில் இருந்து கராச்சி சென்ற விமானம் தரையிரங்க முற்பட்ட போது அருகில் இருந்த குடியிருப்பு பகுதிக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 97 பேர் உயிரிழந்த நிலையில், விபத்து தொடர்பான விசாரணையில், விமானம் தரையிறங்கும்போது கட்டுப்பாட்டு அறையின் எச்சரிக்கையை விமானி மீறியதாக கூறப்படுகிறது.
மதியம் 2.30 மணிக்கு கராச்சியில் தரையிறங்க இருந்த விமானம் 15 நாட்டிக்கல் மைல் தொலைவில் 7000 அடி உயரத்தில் பறப்பதற்கு பதிலாக 10 ஆயிரம் அடி உயரத்தில் பறந்ததாக சொல்லப்படுகிறது.
மேலும், கராச்சி விமான நிலையத்தை அடைய 10 நாட்டிக்கல் மைல் தொலைவில், விமானம் பறந்த உயரம் 3,000 அடிக்கு பதிலாக 7,000 அடியாக இருந்துள்ளது.
இந்த நிலையில், உயரத்தை குறைக்கும்படி இரண்டு முறை கட்டுப்பாட்டு மையம், விமானிக்கு எச்சரிக்கை விடுத்தும், விமானி அதனை பின்பற்றாததே விபத்திற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.