இரண்டு மாத கால ஊரடங்கு இடைவெளிக்குப் பிறகு குஜராத்தில் மீண்டும் கார் உற்பத்தியை துவக்கி உள்ளதாக மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.
நாட்டின் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகிக்கு குஜராத் மாநிலம் ஹன்சான்பூரில் உற்பத்தி ஆலை உள்ளது. சுஸுகி மோட்டார் குஜராத் நிறுவனம் பொலினோ, சுவிப்ட் ஆகிய மாடல்களை தயாரித்து வழங்குகிறது.
ஆண்டொன்றுக்கு 5 லட்சம் வாகனங்களை வரை தயாரிக்கும் திறன் உள்ள இந்த ஆலையில் ஊழியர்கள் இன்று முதல் சமூக இடைவெளியை பின்பற்றி உற்பத்தியை துவக்கி உள்ளதாக மாருதி தெரிவித்துள்ளது. மாருதியின் மனேசர், குருகிராம் ஆலைகளில் ஏற்கனவே உற்பத்தி துவக்கப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.