கொரோனா வைரஸ் நெருக்கடி இருந்தாலும், திட்டமிட்டபடி, குறித்த நேரத்தில் இந்தியாவுக்கு ரபேல் போர் விமானங்கள் வழங்கப்படும் என பிரான்ஸ் தூதுவர் இம்மானுவல் லெனாயின் (Emmanuel Lenain )உறுதி அளித்துள்ளார்.
பிரான்சிடமிருந்து 58000 கோடி ரூபாய் செலவில் விமானப்படைக்கு 36 ரபேல் விமானங்களை வாங்க கடந்த 2016 செப்டம்பரில் ஒப்பந்தம் போடப்பட்டது. இவற்றில் முதலாவது விமானத்தை கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி பிரான்சில் வைத்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பெற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் நான்கு விமானங்கள் மிக விரைவில் அளிக்கப்படும் என்றும் எஞ்சிய விமானங்களும் உறுதி அளித்தபடி 2022 ஏப்ரலுக்குள் இந்தியா வந்தடையும் என்றும் பிரான்ஸ் தூதர் தெரிவித்துள்ளார். ரபேல் விமானங்களின் முதலாவது ஸ்குவார்டனை பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள அம்பாலா விமானப்படைத் தளத்தில் நிறுவ இந்தியா திட்டமிட்டுள்ளத