பயிர்களை தின்று பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தக் கூடிய வெட்டுக்கிளிகள் கூட்டம், உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தை நோக்கி படையெடுப்பதால் மாவட்ட நிர்வாகம் உஷார் நிலையில் உள்ளது.
மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில், வெட்டுக்கிளிகள் 3 கிலோ மீட்டர் நீளத்திற்கு கூட்டமாக வரும் என்பதால் அவற்றை அழிக்கத் தேவையான ரசாயனங்களுடன் தயாராக இருக்குமாறு தீயணைப்புத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பச்சை பசேலென்று இருக்கும் பயிர்களை நோக்கி இவை செல்லும் என்பதால் அவை செல்லும் இடம் குறித்த தகவல்களை கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளிடம் தெரிவிக்குமாறு விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளானர். வெட்டுக் கிளிகளைஅழிக்க ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் இருந்து சிறப்புக் குழுவும் விரைந்துள்ளது.((Vgfx Out))