ஓட்டுனர் உரிமம், வாகனப் பதிவு, காப்பீடு உள்ளிட்ட வாகன ஆவணங்கள் செல்லுபடியாவதற்கான கால அவகாசம் ஜூலை மாதம் 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய நெடுஞ்சாலைத் துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிப்ரவரி 1 அல்லது அதற்குப் பிறகு செலுத்தப்பட வேண்டிய இன்சூரன்ஸ் உள்ளிட்ட ஆவணங்கள் புதுப்பித்தலுக்கான கட்டணங்கள் மற்றும் கொரோனா தொற்றுநோயைத் தடுப்பதற்கான நிபந்தனைகள் காரணமாக இத்தகைய செயல்பாடுகள் முடிக்கப்படாவிட்டால், பழைய ஆவணங்கள் ஜூலை 31 வரை தொடர்ந்து செல்லுபடியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிப்ரவரி 1ந்தேதி முதல் ஊரடங்கு காலம் வரை கட்டணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டால் ஜூலை 31 வரை இதுபோன்ற தாமதங்களுக்கு கூடுதல் அல்லது தாமதமான கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.