ஆந்திராவில் ரசாயன வாயு கசிவு ஏற்பட்ட எல்ஜி பாலிமர்ஸ் நிறுவனத்தை இழுத்து மூட அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விசாகப்பட்டினத்தில் உள்ள அந்த நிறுவனத்தில் கடந்த 7ம் தேதி ரசாயன வாயு கசிந்ததால் 12 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்த வழக்கு ஆந்திர மாநில உயர் நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆலையின் உள்ளிருக்கும் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் எதுவும் அனுமதியின்றி மாற்றக்கூடாது என்று உத்தரவிட்டனர்.
மேலும் எல்ஜி பாலிமர்ஸ் நிறுவனம் முழுவதுமாக மூடப்பட வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், இயக்குநர்கள் உட்பட யாரும் வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்றும் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர். பின்னர் வழக்கு 28ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது