மகாராஷ்டிராவில் வரும் 31ம் தேதிக்குப் பின்னரும் பொதுமுடக்கம் நீட்டிக்கப்படலாம் என அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்திய அவர், பின்னர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள தகவலில், விமான போக்குவரத்துத்துறை அமைச்சருடன் தான் பேசியதாகவும், மகாராஷ்டிராவில் விமான சேவையை மீண்டும் தொடங்குவதற்கு காலதாமதம் ஆகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
சிவப்பு மண்டலங்களில் விமான நிலையங்களை மீண்டும் திறப்பது மிகவும் மோசமான ஆலோசனையாகும் என்றும் அதில் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு அதிக வேகத்தில் உயர்வதால் தற்போதைக்கு பொதுமுடக்கத்தை நீக்குவது குறித்து முடிவு எடுக்கப்படவில்லை என்றும் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.