உத்தரப்பிரதேசத்தில் அனைத்து அரசு அலுவலங்களும் இன்று முதல் செயல்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து அந்த மாநில தலைமைச் செயலாளர் ஆர்.கே. திவாரி விடுத்துள்ள அறிக்கையில், புதிய முறையின்படி காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை 3 கட்டங்களாக அலுவலகங்கள் இயங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து அலுவலகங்களும் 50 விழுக்காடு ஊழியர்களுடன் தனிமனித இடைவெளியுடன் இயங்கவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பணியாளர்களும் தங்களின் மொபைல் போன்களில் ஆரோக்கிய சேது செயலியை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.