கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் அடுத்த இரு மாதங்களில் சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.
இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மகாராஷ்டிரம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி, மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள 11 மாநகராட்சி பகுதிகளில் தான் நாட்டில் உள்ள கொரோனா பாதிப்பில் 70 சதவீதம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 11 நகர்ப்புற பகுதிகளிலும் அடுத்த இரு மாதங்களில் மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மாநகராட்சிகளில் மக்கள் நெருக்கம் அதிகமுள்ள இடங்கள், குடிசைப் பகுதிகள், வெளிமாநில தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.