டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்களில் அடுத்த சில நாள்களுக்கு தீவிர வெப்பம் நிலவும் என்பதை குறிக்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்ட மக்களை, தற்போது கடும் வெப்பமும் வாட்டி எடுத்து வருகிறது.
வடஇந்தியாவின் பல இடங்களில் 45 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகி வருகிறது. இந்நிலையில் டெல்லி, ஹரியானா,பஞ்சாப், சண்டீகர், ராஜஸ்தான் மாநிலங்களுக்கு அடுத்த 2 நாள்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
இதேபோல் உத்தர பிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதிக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது. ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட மாநிலங்களில் தீவிர வெப்பம் பதிவாகும், ஆதலால் பகல் நேரத்தில் வெளியே மக்கள் நடமாட வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளது.