புதுச்சேரியில் மதுபான கடைகளை திறக்க துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார்.
அங்கு கொரோனா தொற்றுக்கு 43 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 20-ம் தேதி முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதற்கான கோப்புகள் தயாரிக்கப்பட்டு துணை நிலை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், மதுபானங்களுக்கு கோவிட் வரி விதிக்கவேண்டும் எனக்கூறி கோப்புகள் நிராகரிக்கப்பட்டன.
இதையடுத்து, ஆளுநர் கூறியபடி, மதுபானங்களுக்கு கோவிட் வரி விதிப்பதற்கு அமைச்சரவை ஒப்புகொண்டதையடுத்து, மதுக்கடைகளை திறப்பதற்கும் துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். நாளை முதல் புதுச்சேரியில் மதுபான கடைகள் செயல்படும் என கூறப்படுகிறது.