கடந்த இரண்டு மூன்று நாட்களாக வெப்ப நிலை மிகவும் வாட்டி வதைக்கும் நிலையில் மேலும் ஒருவாரத்திற்கு அனல் காற்று வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தலைநகரான டெல்லியில் நேற்று வெப்பம் மிகவும் அதிகரித்து காணப்பட்டது. 44 புள்ளி 7 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானதாக சப்தர்ஜங் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதே போன்ற கொடும் வெயில், வெப்பம் நாட்டின் பல்வேறு நகரங்களிலும் உணரப்பட்டது.
ஊரடங்குகள் தளர்த்தப்படும் நாட்களில் கடும் வெயில் காரணமாகவும் மக்கள் வீடுகளில் முடங்கியதால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. அடுத்த நான்கு ஐந்து நாட்களுக்கு வடகிழக்கு மாநிலங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.