தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் இன்று மேலும் 62 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் புள்ளி விவரங்களை அந்த மாநில சுகாதார துறை வெளியிட்டுள்ளது. அதில் மாநிலம் முழுவதும் 62 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களையும் சேர்த்து கேரளாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 790ஆக அதிகரித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 515 பேர் குணமாகி விட்டதாகவும், மேலும் 275 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் கேரள சுகாதாரத் துறை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.