தெலுங்கானாவின் வாரங்கல் மாவட்டத்தில், கிணற்றில் இருந்து 9 சடலங்கள் மீட்கப்பட்ட விவகாரத்தில் மர்மம் நீடிக்கும் நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பிறகே உண்மை தெரியவரும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கோரிகுண்டா என்ற இடத்தில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மசூத் என்பவர் குடும்பத்துடன் தங்கியிருந்து அப்பகுதியில் உள்ள கோணிப்பை தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அருகில் இருந்த பாழடைந்த கிணற்றில் மசூத், அவருடைய மனைவி, மகள், மூன்று வயது குழந்தை ஆகிய 4 பேர் சடலமாக கிணற்றில் மிதந்துள்ளனர்.
மறுநாள் அதே கிணற்றில் மசூத்தின் மகன் சபாக், பீகாரைச் சேர்ந்த இருவர், திரிபுராவைச் சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட 5 பேர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர். 9 பேரின் உடலில் எவ்வித காயங்களும் இல்லாத நிலையில் தற்கொலையா, கொலையா, எத்தகைய சூழலில் உயிரிழப்புகள் ஏற்பட்டன என்பதில் மர்மம் நீடிக்கிறது.