டிஎச்எப்எல் நிறுவனர்கள் வாத்வான் சகோதரர்களுக்கு ஆஸ்திரேலியாவில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சொத்து உள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
டிஎச்எப்எல் நிறுவனத்தின் கடன்பத்திரத்தில் எஸ் வங்கி மூவாயிரத்து 700 கோடி ரூபாய் முதலீடு செய்தது. இந்தத் தொகையைத் திருப்பிச் செலுத்தாத நிலையில், அதற்குப் பதில் எஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரின் மகள் நிறுவனத்துக்கு வாத்வான் சகோதரர்கள் 600 கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளனர்.
இந்த நிதி மோசடி வழக்கை விசாரித்து வரும் அமலாக்கத்துறை, வாத்வான் சகோதரர்களுக்கு ஆஸ்திரேலியாவில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சொத்து உள்ளது குறித்து விசாரிக்க 4 நாள் காவலில் எடுக்க அனுமதிக்க வேண்டும் என மும்பை சிறப்பு நீதிமன்றத்திடம் கோரியது. இதையடுத்து 4 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.