நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிரத்தில் சிவப்பு மண்டலத்தைத் தவிர மற்ற பகுதிகளில் பேருந்துப் போக்குவரத்து தொடங்கியுள்ளது.
நான்காம் கட்ட ஊரடங்கில் நிறைய கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், மகாராஷ்டிரத்தில் சிவப்பு மண்டலங்களான மும்பை, தானே, புனே மாநகரங்களிலும், பிற நகரங்களில் உள்ள கட்டுப்பாட்டுப் பகுதிகளையும் தவிர மற்ற பகுதிகளில் வெள்ளி முதல் பேருந்துப் போக்குவரத்து தொடங்கியுள்ளது.
பேருந்தில் ஏறுமுன் பயணிகள் அனைவருக்கும் வெப்பநிலை கண்டறியும் சோதனை செய்யப்படுகிறது. பேருந்துகளில் சமூக விலகலைக் கடைப்பிடிப்பதற்காக 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டுமே ஆட்கள் ஏற்றப்படுகின்றனர். முதல் நாளில் 457 வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டதாகவும், 11ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பயணம் செய்துள்ளதாகவும் மகாராஷ்டிரச் சாலைப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.