மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனா நோய் பாதிப்பிலிருந்து குணமாகி 100 வயது மூதாட்டி வீடு திரும்பும் வீடியோ வெளியாகியுள்ளது.
இந்தூரை சேர்ந்த சாந்தா பாய் என்ற 100 வயது மூதாட்டி, கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் நோய் தொற்றிலிருந்து சாந்தா பாய் குணமானார். இதையடுத்து மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு நேற்று முன்தினம் அவர் அழைத்து வரப்பட்டார்.
அப்போது அவருக்கு அண்டை வீட்டினர், குடும்பத்தினர் கைதட்டி உற்சாகத்துடன் வரவேற்பு அளித்த வீடியோ வெளியாகி, கொரோனா நோய் பாதித்தோர் இடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.