கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு வேலி தாண்டி செல்வோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில், தமிழக எல்லைப்பகுதியில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாகச் செல்லும் 20க்கும் மேற்பட்ட எல்லைப்பகுதிகள் கர்நாடகா மாநில அரசால் முழுவதுமாக மூடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ஒசூர் பகுதிகளிலுள்ள பொதுமக்கள் தங்களது அன்றாட பணிகளுக்காகவும், தொழில்களுக்காகவும், உறவினர்களை சந்திக்கவும் மாநில எல்லைப்பகுதிகளில் மூடப்பட்டுள்ள முள்வேலிகள் மற்றம் பள்ளங்களை தாண்டி சென்று வருகின்றனர். இதுபோன்ற நடவடிக்கைகளை ஒசூர் பகுதி மக்கள் நிறுத்த வேண்டும் என கர்நாடக போலீசார் எச்சரித்துள்ளனர்.