இஸ்லாமிய கூட்டுறவு அமைப்பான OIC யில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அளித்த புகாருக்கு மாலத்தீவு ஆதரவு அளிக்கவில்லை.
இந்தியாவில் குறிப்பாக காஷ்மீரில் முஸ்லீம்கள் மதரீதியாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்படுவதாக பாகிஸ்தான் கூறியிருந்த நிலையில் இந்தியா மீது வீண் பழிசுமத்த முடியாது என்றும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும் மாலத்தீவு அரசு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
57 இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்த ஓஐசி அமைப்பின் கூட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக மாலத்தீவு அரசு தனது குரலை உயர்த்தியுள்ளது.
இந்தியா முஸ்லீம்களுக்கு எதிரானது என்று நடவடிக்கை எடுத்தால் தெற்காசியாவில் நீடிக்கும் சமூக நல்லிணக்கத்திற்கு அது பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் மாலத்தீவு அரசு விளக்கியுள்ளது.