புயலால் ஏற்பட்ட பாதிப்பைக் குறைக்க மேற்குவங்க அரசு கடுமையாகப் போராடியதாகப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியுடன் புயல் சேதத்தை விமானத்தில் இருந்து பார்வையிட்ட பிரதமர், ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவியை அறிவித்தார்.
வீடியோவில் பிரதமர் விடுத்துள்ள செய்தியில், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மக்களை வீட்டிலேயே தங்கியிருக்கச் செய்யவும், புயலின் பாதிப்பில் இருந்து காக்க வீடுகளில் இருந்து மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றவும் வேண்டி இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய முரண்பாடான நிலையிலும் மேற்குவங்க அரசு சிறப்பாகப் போராடியுள்ளதாக மோடி பாராட்டியுள்ளார்.