கொரோனா காலகட்டத்தில் சீனா போன்ற நாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டு முதலீடுகள் பலத்த ஆய்வுக்குப் பின்னரே அனுமதிக்கப்படும் என மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இதற்காக வர்த்தக அமைச்சகம் மற்றும் செபியுடன் ஆலோசித்து புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டு, அது நிதி அமைச்சகத்தின் பரிசீலனையில் இருப்பதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
இந்திய நிறுவனங்களுக்கு கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை பயன்படுத்தி, நம்முடன் எல்லையை பங்கிடும் ஒரு நாடு வெளிநாட்டு முதலீடு என்ற பெயரில் அவற்றை கைப்பற்ற நினைப்பதாக அரசு நினைக்கிறது.
இதை தடுக்கும் நோக்கில் இனி வரும் அனைத்து முதலீடுகளும் தீவிரமாக ஆராயப்படும். இந்திய அரசு வழங்கும் பாதுகாப்பு தடையில்லா சான்றிதழைப் பெற்ற பிறகே வெளிநாட்டு முதலீடுகளை அனுமதிப்பது பற்றி ஆலோசிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.