கொரோனா அச்சுறுத்தலையும் மீறி தெலங்கானாவின் ஐ.டி ஏற்றுமதி கடந்த நிதியாண்டில் 1.28 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.
இது அதற்கு முந்தைய நிதி ஆண்டை விடவும் சுமார் 18 சதவிகிதம் அதிகமாகும். ஐ.டி. ஏற்றுமதியில் தெலங்கானாவின் வளர்ச்சி தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது. கடந்த நிதியாண்டில் 128807கோடி ரூபாய்க்கு இந்த துறையில் ஏற்றுமதி நடந்துள்ளது. இந்த வளர்ச்சி தேசிய ஏற்றுமதி சராசரியான 8.09 சதவிகிதத்தை விட இரண்டு மடங்கு அதிகம் என்றும் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.
அதே போன்று இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் ஐ.டி.சேவை மற்றும் பொருள்களில் தெலங்கானாவின் பங்களிப்பு 10.61 ல் இருந்து 11.58 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இதற்கேற்றவாறு அங்கு ஐ.டி, வேலை வாய்ப்புகளும் கணிசமாக அதிகரித்துள்ளது.