மகாராஷ்ட்ராவில் கொரோனா பாதிப்புடையவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரமாக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 345 பேர் பாதிப்படைந்துள்ளனர்.
நேற்று உயிரிழந்த 64 பேரில் மும்பையில் மட்டும் 41 பேர் பலியாகினர். இதுவரை சுமார் 12 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மக்கள் நெரிசல் மிக்க நகரம் என்பதால் நோய்த் தொற்று வேகமாகப் பரவுவதாகவும் தாராவி போன்ற சமூக இடைவெளிக்கு சாத்தியமில்லாத பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆயினும் சிகிச்சைகள் , பரிசோதனைகள் அதிக அளவில் இருப்பதால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையைக் கண்டு பதற்றம் தேவையில்லை என்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.மும்பை, புனே உள்ளிட்ட நகரங்களில் ஜூன் 15ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.