புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட நாட்டின் முக்கியப் பிரச்சினைகள் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட 18 கட்சிகளின் தலைவர்கள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்க உள்ளளனர். அதே நேரத்தில் பகுஜன் சமஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் சோனியா காந்தியின் ஆலோசனையில் பங்கேற்க போவதில்லை என்று தெரிவித்துள்ளனர்.
இந்த மூன்று கட்சிகளுக்கும் காங்கிரசுக்கும் இடையே கடுமையான முரண்பாடு வலுத்துவருவது ஒரு காரணமாக கூறப்படுகிறது. ஆனால் 35 ஆண்டுகளாக பாஜகவுடன் கூட்டணி வகுத்த சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே முதன்முறையாக எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.