ஜார்கண்ட் மாநிலத்தில் மதுபானங்களை வீட்டுக் சென்று வழங்கும் பணியில் ஸ்விக்கி உணவு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான ஸ்விக்கி, ஜார்க்கண்ட் மாநிலத்தில் மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்ய, அம்மாநில அரசுடன் கைகோர்த்துள்ளது.
இதனைத் தொடர்ந்து ராஞ்சி நகரில் இது முதல்கட்டமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள், தங்கள் வயதை உறுதிசெய்யும் வகையில் ஏதேனும் அடையாள அட்டையைக் கொண்டு ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்யலாம் என்றும், OTP எண்ணை பயன்படுத்தி டெலிவரி செய்யும் நபரிடம் இருந்து மதுபானங்களை பெற்றுக்கொள்ளலாம் எனவும் ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.