சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளிட்ட குறிப்பிட்ட ரயில்நிலையங்களில் டிக்கெட் கவுன்டர்களில் முன்பதிவு வசதி இன்று தொடங்குகிறது.
ஜூன் 1 முதல் 200 ரயில்களை இயக்கப் போவதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு ஆன்லைனில் மட்டும் நடந்து வந்த நிலையில் ரயில் நிலையத்திலும் நேரடியாக சென்று முன்பதிவு செய்யும் வசதி இன்று முதல் தொடங்குகிறது.
பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் முகக் கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் பயணம் ரத்து செய்வதற்கான கட்டணங்கள் இந்த கவுண்டர்களில் வழங்கப்படமாட்டாது என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
ரத்து செய்யப்படும் பயணங்களுக்கான கட்டணம் ஆறுமாத காலத்திற்குள் திருப்பித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. தபால் நிலையங்கள், ரயில்வேயின் அங்கீகரிக்கப்பட்ட ஏஜன்ட்டுகள் மூலமாகவும் பயணிகள் டிக்கட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.