கர்நாடகத்தில் மதுபானங்கள் மீது வரியை உயர்த்தி, விலை அதிகரித்ததால், அதன் விற்பனை 60 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது.
கர்நாடகாவில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்ட பிறகு, தொடர்ந்து 3 நாட்கள் சாதனை அளவாக மதுபானங்கள் விற்றுத் தீர்ந்தன.
மதுபானங்கள் மூலமான வரி வருவாயை அதிகரித்துக் கொள்ள முடிவு செய்த கர்நாடக அரசு, இந்திய மதுபானங்கள் மீதான கூடுதல்கலால் வரியை, மதிப்புக்கேற்ற வகையில் 21 சதவீதம் முதல் 31 சதவீதம் வரை அதிகரித்தது. இதனால் பிராண்டுக்கு ஏற்ப பாட்டிலுக்கு 50 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை விலை அதிகரித்தது.
இதனால் மே 20ஆம் தேதி நிலவரப்படி கர்நாடகத்தில் இந்திய மதுபான விற்பனை 60 சதவீதம் அளவுக்கு சரிந்தது. மே 6ஆம் தேதி 232 கோடி ரூபாய் அளவுக்கு மதுபானங்கள் விற்பனை ஆன நிலையில், மே 20ஆம் தேதி நிலவரப்படி 61 கோடி ரூபாய்க்கு மட்டுமே மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன.