ஆந்திராவிலும் இன்று முதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.பேருந்து பயணிகள் ஆரோக்கிய சேது செயலியை செல்போன்களில் இறக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. விஜயவாடா, விசாகபட்டிணம் நகர பஸ் சேவைகள் மட்டும் இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.தெலுங்கானாவில் சுமார் 6 ஆயிரம் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
பேருந்துகள், டாக்சிகள் மற்றும் ஆட்டோ ரிக்ஷாக்கள் மாநிலம் முழுவதும் சவாரி செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஐதராபாத்தில் கட்டுப்பாடுகளுடன் 50 சதவீத கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் கட்டுப்பாடுகளுடன் கடைகள், நிறுவனங்களை திறக்க மாநில அரசு அனுமதியளித்ததால் தளர்வுகளுடன் மாநிலம் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.