ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, அசாம் மாநிலத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் மீண்டும் பணிகள் தொடங்கியுள்ளன.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த மார்ச் மாதத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை அடுத்து, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் தேயிலை உற்பத்திக்கு பெயர் போன மாநிலமான அசாமில் உள்ள தேயிலை தோட்டங்களில் பணிகள் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அசாம் அரசு தளர்த்தியது. அப்போது தேயிலை தோட்ட பணிகளுக்கு சில நிபந்தனைகளுடன் விதிவிலக்கு அளித்தது. இதனால் திப்ரூகரில் (Dibrugarh ) உள்ள தேயிலை தோட்டத்தில் மீண்டும் தொழிலாளர்கள், பணிகளை தொடங்கியுள்ளனர். முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியுடனும் அவர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.