மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களில் வீசிய அம்பன் புயலுக்கு 15 பேர் பலியாகி உள்ளனர். கடலோரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகளும், எண்ணற்ற மரங்கள் மற்றும் மின் கம்பங்களும் புயலின் கோரத் தாண்டவத்தில் சேதமடைந்தன.
வங்க கடலில் உருவான அம்பன் புயல், சூப்பர் புயலாக வலுப் பெற்று, பின்னர் அதி தீவிர புயலாக மாறி மேற்கு வங்கம் நோக்கி நகர்ந்தது. நேற்று பிற்பகல் மேற்குவங்கத்தின் திகா (digha)மற்றும் வங்கதேசத்தின் ஹடியா ( hatia) தீவுக்கு இடையே புயல் கரையைக் கடக்கத் தொடங்கியது.
ஒடிசாவில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய அம்பன் புயல் மேற்குவங்க மாநிலம் சுந்தர்பன் அருகே கரையைக் கடந்தது. மணிக்கு 165 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதால் மரங்கள் வேரோடு பெயர்ந்து விழுந்தன. காற்றின் வேகத்தை தாங்க முடியாமல் ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்தன. பல்லாயிரக்கணக்கான மரங்களும், மின்கம்பங்களும் சாலைகளில் விழுந்து கிடந்தன
பின்னர் புயல் கொல்கத்தாவை நோக்கி நகரத் தொடங்கியது. புயல் கரையைக் கடந்தபோது ஆறரை மணி நேரத்திற்கும் பலத்த காற்று வீசியது.மேற்கு வங்கத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. 24 பர்கனாஸ், ஹவுரா,கொல்கத்தா, மேற்கு மிட்னாபூர், கிழக்கு மிட்னாபூர், புருலி பங்குரா உள்ளிட்ட பகுதிகள் புயலால் அதிக பாதிப்புகளை சந்தித்துள்ளன.
புயல் காற்றால் பள்ளியின் பள்ளி ஒன்றின் கூரை பறக்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
கொல்கத்தாவில் தலைமைச்செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையிலேயே கடந்த 3 நாட்களாக முகாமிட்டுள்ள முதலமைச்சர் மம்தா பானர்ஜி உடனுக்குடன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வருகிறார்
கொரோனாவை விட கூடுதலான சேதத்தை அம்பன் புயல் ஏற்படுத்தியிருப்பதாக அவர் வேதனை தெரிவித்தார்.
10 முதல் 12 பேர் வரை பலியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், புயல் குறித்த சேதத்தை மதிப்பிடவே 3 நாட்களாகும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார். 40க்கும் மேற்பட்ட தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் புயல் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
விழுந்து கிடந்த ஆயிரக்கணக்கான மரங்களை அப்புறப்படுத்தும் பணியும் மேற்கொள்ளப்படுகிறது. ஒடிசாவில் 3 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
class="twitter-tweet">West Bengal: Trees uprooted & waterlogging in several parts of Kolkata in wake of #CycloneAmphan. The cyclone is very likely to weaken into a deep depression during the next 3 hours as per India Meteorological Department (IMD). pic.twitter.com/f81DZw3a0W
— ANI (@ANI) May 21, 2020