மருந்து உற்பத்தியில் முக்கிய இடம் வகிக்கும் சோடியம் சிட்ரேட்டை சீனாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கான வரியை மேலும் 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.
இதன் மீதான இறக்குமதிக்கு 2015 ஆம் ஆண்டு மே மாதம் அரசு விதித்திருந்த வரிவிதிப்பு 20 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. எனினும் சோடியம் சிட்ரேட்டை குறைந்த விலையில், அதிக அளவில் இந்தியாவுக்கு சீனா ஏற்றுமதி செய்து வந்தது.
இதனால், உள்நாட்டு வர்த்தகர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டிருப்பது அரசு நடத்திய விசாரணையில் தெரிய வந்தது. சந்தை விலையை விடவும் குறைந்த விலைக்கு ஒரு பொருளை ஏற்றுமதி செய்தால் அந்த நிறுவனத்தை தண்டிக்கும் விதமாக ஆன்டி-டம்பிங் வரியும், உள்நாட்டு தொழிற்துறைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விதத்தில் அதிக அளவுக்கு ஒரு பொருள் இறக்குமதி செய்யப்படுவதை தடுக்க உள்நாட்டுப் பொருள் பாதுகாப்பு வரியும் விதிக்கப்படுவது வாடிக்கையாகும்.