சிறிய உணவு பதப்படுத்தும் தொழில்கள், வங்கி அல்லா நிதி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு கோடிக்கணக்கான ரூபாய் நிதியுதவி அளிக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்றது, உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலாசீத்தாராமன், வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் பிரதமரின் 20 லட்சம் கோடி பொருளாதார நிதியுதவித் திட்டங்களின் கீழ் மேலும் சில துறைகளுக்கு சலுகை அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அமைப்புசாரா தொழிற்துறையின் கீழ் வரும் சிறிய உணவ பதப்படுத்தும் தொழில்களை ஒழுங்குபடுத்த 10000 கோடி ரூபாய் ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. அதே போன்று வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், வீட்டுக்கடன் நிறுவனங்கள் ஆகியவற்றின் நிதி ஆதாரத்தை பெருக்குவதற்கான நிதி அமைச்சகத்தின் சிறப்பு நிதியுதவித் திட்டத்திற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.