கொரோனா வைரஸ் ஏற்படுத்திய சர்வதேச பொருளாதார தாக்கத்தால், இந்தியாவில் இருந்து சுமார் 1,21,600 கோடி ரூபாய் அளவுக்கான முதலீடுகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் திரும்ப பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பு குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கலான அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா உள்ளிட்ட வளர்ந்து வரும் ஆசிய நாடுகளில் இருந்து மொத்தம் சுமார் 1,97,600 கோடி ரூபாய் முதலீட்டை வெளிநாட்டு நிறுவனங்கள் திரும்பப் பெற்றுள்ளன.
அதில் இந்தியாவின் பங்கு பெரும்பான்மையாக இருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது. முன்னணி நாடுகளின் ஜிடிபி யை பொறுத்தவரை, அமெரிக்கா 4.8 சதவிகித வீழ்ச்சியையும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் 3.8 சதவகித சரிவையும் சந்தித்துள்ளதாக அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.