பிபிஇ உடைகளை (PPE Suits)நாள்தோறும் நான்கரை லட்சம் எண்ணிக்கையில் தயாரிக்கும் திறன் கொண்ட நாடாக இந்தியா உருவாகியுள்ளது.
கொரோனா பரவாமல் தடுக்க டாக்டர்கள், நர்ஸ்கள், சுகாதாரப்பணியாளர்கள் அணியப்படும் பிபிஇ கவச உடைகளை முன்பு இறக்குமதி செய்யும் நிலையில் இருந்தது. இதை கருத்தில் கொண்டு, அதை சொந்தமாக தயாரிக்கும் வகையில் 600க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. அரசின் இந்த முயற்சிக்கு கடந்த 5ம் தேதியன்று நல்ல பலன் கிடைத்தது.
அன்றைய நிலவரப்படி இரண்டரை லட்சத்துக்கும் மேற்பட்ட பிபிஇ உடைகள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டன. இதையடுத்து 2 வாரங்களில் அந்த திறன், 2 மடங்கு அதிகரித்து, நாள்தோறும் நான்கரை லட்சம் எண்ணிக்கையில் தயாரிக்கும் திறனை இந்தியா தற்போது பெற்றுள்ளது. ட்விட்டர் பக்கத்தில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி வெளியிட்ட பதிவில் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.