இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் விகிதம் 38 சதவீதத்திற்கு மேல் இருக்கிறது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்திற்கு மேல் உயர்ந்துள்ள நிலையில், 58 ஆயிரத்து 802 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களில் 2.9 சதவீதம் பேர் மட்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் ஒரு லட்சம் மக்கள் தொகையில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளவர்களின் விகிதம் சராசரியாக 4.1 ஆக உள்ளது.
அதே சமயம் இந்தியாவில் அந்த விகிதம் 0.2 என்ற மிக குறைந்த அளவில் இருக்கிறது. இதுவரை 24 லட்சத்து 25 ஆயிரம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில் தற்போது கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் விகிதம் 38.73 சதவீதமாகவும், அது தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.