மும்பை மாநகரின் அடையாளமாகத் திகழும் இடங்கள் கொரோனா நோயாளிகளைத் தனிமைப்படுத்தும் இடங்களாக மாற்றப்பட்டு வருகின்றன.
மும்பையில் ஏற்கெனவே பாந்த்ரா - குர்லா வளாக மைதானத்தில் ஆயிரம் படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தற்காலிக மருத்துவமனையை ஆறாயிரம் படுக்கைகள் கொண்டதாக விரிவாக்க உள்ளனர். தேசிய விளையாட்டுக் கழக மைதானம், மகாலட்சுமி குதிரைப் பந்தய மைதானம், மாகிம் பூங்கா, நெஸ்கோ மைதானம், நேரு அறிவியல் மையம், நேரு கோளரங்கம் ஆகிய இடங்களிலும் தற்காலிகத் தனிமை முகாம்கள், தீவிரச் சிகிச்சைப் பிரிவுகளை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.