இந்திய விமானப்படைக்கு 450 போர் விமானங்கள் வாங்க திட்டமிடப்பட்டிருப்பதாக விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ். பதெளரியா ((RKS Bhadauria )) தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், இந்தியாவின் வட பகுதிகளிலும், மேற்கு பகுதிகளிலும் நிலை நிறுத்த 450 போர் விமானங்களை எதிர்காலத்தில் இந்தியா வாங்க திட்டமிடப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.
450 போர் விமானங்கள் எவை எவை என பட்டியலிட்ட பதெளரியா, 36 ரபேல் போர் விமானங்கள், 114 பன்முக போர் விமானம், 100 மேம்படுத்தப்பட்ட நடுத்தர போர் விமானம், 200க்கும் மேற்பட்ட இலகுரக போர் விமானம் ஆகியவற்றை வாங்க திட்டமிடப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு விமானப்படையில் அடுத்து வரும் 35 ஆண்டுகளில் 450 போர் விமானங்களும் படிப்படியாக சேர்க்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.