மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து வரும் வெள்ளிக் கிழமை நாடுதழுவிய வேலைநிறுத்தம் செய்யத் தொழிற்சங்கங்கள் திட்டமிட்டுள்ளன.
எட்டு மாநிலங்களில் தொழிலாளர்களின் வேலைநேரம் 12 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேச அரசு புதிதாகத் தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்குத் தொழிலாளர் சட்டம் பொருந்தாது என அறிவித்துள்ளது.
தொழிலாளர் சட்டத்தை வலுவிழக்கச் செய்யும் இந்தச் செயலைக் கண்டித்து வரும் வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக சிஐடியூ, ஏஐடியூசி, இந்த் மஸ்தூர் சபா உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. ஊரடங்கின்போது தொழிலாளர் சட்டத்தில் செய்த திருத்தங்களைத் திரும்பப் பெற வேண்டும், வருமான வரி செலுத்தாத தொழிலாளர்களுக்கு ஏழாயிரத்து ஐந்நூறு ரூபாய் உதவித் தொகை