கொரோனா தாக்கினால், நீரிழிவு நோயாளிகள் மரணமடையும் வாய்ப்பு, மற்றவர்களை விட 50 சதவீதம் அதிகமாக உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக பேசிய டெல்லி ‘எய்ம்ஸ்’மருத்துவமனையின் நாளமில்லா சுரப்பி துறை தலைவரும், பேராசிரியருமான டாக்டர் நிகில் டாண்டன்,
உயர் ரத்த அழுத்தம், இதய பிரச்சினை, புற்றுநோய், சிறுநீரக கோளாறு ஆகிய நோய் கொண்டவர்களுக்கும் ஆபத்துதான் என்றார்.
ஆகவே, நீரிழிவு நோய் இருப்பவர்கள், வழக்கமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், தங்கள் ரத்த சர்க்கரை அளவை அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். உடலில் நீர்ச்சத்தை பராமரித்து வர வேண்டும் என்றும் மருந்துகளை சரியாக உட்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார். வீட்டிலேயே உடற்பயிற்சிகளை மேற்கொண்டால், நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை முறை அமைந்து, மனநலமும், உடல்நலமும் சீராகும் என்றும் அவர் தெரிவித்தார்.