நாடாளுமன்றக் குழுக்களின் கூட்டங்களைக் காணொலிக் காட்சி வாயிலாக நடத்துவது தொடர்பாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவும் மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவும் ஆலோசனை நடத்தினர்.
மாநிலங்களவைத் தலைவருக்கான அறையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதுதொடர்பாக பேசிய அதிகாரி , ((gfx in)) நாடாளுமன்றக் குழுக் கூட்டங்களைக் காணொலிக் காட்சி வாயிலாக நடத்துவதற்கு இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மக்களவை, மாநிலங்களவைகளின் செயலர்கள் அவைத் தலைவர்களுக்கு விளக்கியதாக குறிப்பிட்டார்.
காணொலிக் காட்சி வாயிலாக கூட்டங்களை நடத்தும்போது ஏற்படும் பிரச்னைகள், சவால்கள் தொடர்பாக இருவரும் ஆலோசித்ததாகவும் தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கைகளைத் தாக்கல் செய்யுமாறு இரு அவைகளின் செயலர்களுக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் ((gfx out))அவர் தெரிவித்தார்