மத்திய அரசுக்கு சொந்தமான கோல் இந்தியா நிலக்கரி உற்பத்தி நிறுவனத்தை தனியார் மயமாக்கும் திட்டமில்லை என்று மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.
இதுதொடர்பாக டெல்லியில் பேசிய அவர், அந்த நிறுவனத்தை வலுப்படுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது என்றார். கோல் இந்தியா நிறுவனத்தின் தொடர் உற்பத்தியால், எதிர் வரும் காலத்தில் ஆண்டுதோறும் 10 கோடி டன் நிலக்கரி இறக்குமதி குறையும்’ என்றும் அவர் கூறினார். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் நிலக்கரியில் 80 சதவீதம் கோல் இந்தியா நிறுவனம் மூலம் கிடைத்து வருகிறது.