காணொலிக் காட்சி மூலம் ஒரு நீதிபதி அமர்வு தினமும் 40 வழக்குகளை விசாரிக்க அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலையடுத்து நாடு முழுவதும் நீதிமன்றங்கள் மூடப்பட்டன.
இதனால் முக்கிய மற்றும் அவசர வழக்குகள் மட்டுமே காணொலிக் காட்சி மூலம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இந்த நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆர்.பானுமதி, இந்து மல்ஹோத்ரா, அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு, காணொலி முறையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் வழக்குகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து ஆலோசனை நடத்தினர்.
பின்னர் வழக்குகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து முடிவெடுத்தாகக் கூறப்படுகிறது. கூடுதல் வழக்குகளை விசாரிப்பது குறித்து தலைமை நீதிபதி எஸ். ஏ. போப்டேவுடன் கலந்தாலோசிக்க உள்ளதாக நீதிபதி பானுமதி தெரிவித்துள்ளார்.